வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரல் நிர்மலா தேவியின் குரல்தான் - சோதனை அறிக்கை

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் குரலும் வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரலும் ஒன்றுதான் என சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. #NirmalaDevi
வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரல் நிர்மலா தேவியின் குரல்தான் - சோதனை அறிக்கை
Published on

விருதுநகர்:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நிர்மலா தேவி போலீசில் மாட்ட முக்கிய ஆதாரமாக இருந்த வாட்ஸ்அப் உரையாடலில் இருந்தது அவரது குரல் தானா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த கேள்வி விசாரணையின் போக்கை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக அவரது குரலை சோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி, வாட்ஸ்அப் ஆடியோ - நிர்மலா தேவியின் குரலை ஒப்பிட்டு சோதனை செய்ததில் இரு குரல்களும் ஒன்று என சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #CBCID

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com