

இந்தியா ஒரு நடுநிலையான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறது. உலக அரங்கில் இருதுருவங்களாக பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுடனும் இந்தியா நட்புடன் உள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்பு பாதிக்கப்படும் சூழல் நிலவியது.
ஏனெனில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதால், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை இந்தியா மீதும் விதிக்க முடியும். இதையடுத்து, ரஷ்யாவுடனான நட்பை இந்தியா கைவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என்றும், இருநாட்டு நட்பு தொடரும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.