பெங்களூர் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை வந்தடைந்தார்

பெங்களூரு சிறையிலிருந்து 5 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை தியாகராயர் நகருக்கு கார் மூலம் வந்தடைந்தார்.
பெங்களூர் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை வந்தடைந்தார்
Published on

சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் பரோல் கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பத்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சிறைத்துறை சில நிபந்தனைகளுடன் கூடிய 5 நாள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, சிறை வளாகத்தில் இருந்து இன்று மாலை கிளம்பிய அவர் கார் மூலமாகவே சென்னை வந்தடைந்தார். அவருடன் டி.டி.வி தினகரன் உள்ளிட்டவர்களும் வந்தனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளவரசியின் மகன் வீட்டுக்கு வந்தடைந்த சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடி வரவேற்றனர். கட்சி ரீதியில் யாருடனும் ஆலோசனை நடத்தக்கூடாது என சிறைத்துறை நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com