

கன்னியாகுமரி கோவிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன், தான் எப்போதும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று சிவபெருமானை பார்த்து கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் ஒற்றைகாலில் தவம் இருந்தார். அந்த பாறையில் அம்மனின் கால்தடம் பதிந்திருந்தது. 1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த சுவாமி விவேகானந்தர் அந்த பாறைக்கு சென்று அம்மனின் கால்தடத்தை பார்த்தபடி தியானம் செய்தார்.
இதை நினைவுபடுத்தும் வகையில் அந்த பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடந்தது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி நினைவு மண்டபம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த மண்டபம் நிறுவி வருகிற (செப்டம்பர்) 2-ந்தேதியுடன் 49 ஆண்டுகள் முடிந்து 50-வது ஆண்டு தொடங்குகிறது. அதனால், இந்த பொன்விழா கொண்டாட்டத்தை ஒரு ஆண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா “மகா சம்பர்க்க அபியான்” என்ற பெயரில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.