விருகம்பாக்கம் அருகே செல்போன் சரி செய்து தராததால் மாணவி தற்கொலை

விருகம்பாக்கம் அருகே செல்போன் சரி செய்து தராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

போரூர்:

விருகம்பாக்கம் நாராயணசாமி 11-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தேவி. துப்புரவு தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி (16). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது செல்போன் பழுதானது. அதனை சரி செய்து தருமாறு அவரது அண்ணனிடம் கேட்டார். ஆனால் புவனேஸ்வரி வெகு நேரமாக செல்போனில் பேசிக் கொண்டே இருப்பதால் அதனை சரி செய்து கொடுக்கவில்லை.

நேற்று செல்போனை சரி செய்து கொடுக்க சொல்லி கேட்டு அண்ணனுடன் புவனேஸ்வரி தகராறில் ஈடுபட்டார். இதில் மனம் உடைந்த புவனேஸ்வரி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com