விருகம்பாக்கம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

விருகம்பாக்கம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

போரூர்:

விருகம்பாக்கம் மேற்கு நடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தர் (வயது45). அண்ணா நகரில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் ஈரோட்டைச் சேர்ந்த குமார் என்கிற திருநங்கை கடந்த 4மாதங்களாக தங்கி சமையல் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சுந்தர் கடந்த 10-ந் தேதி வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினர். அப்போது பீரோவில் இருந்த ரூ27ஆயிரம் ரொக்கம், 1½ லட்சம் மதிப்பிலான பிளாட்டினம் செயின் மற்றும் பிரேஸ்லெட், விலை உயர்ந்த கோல்டு வாட்ச், செல்போன் ஆகியவை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக விருகம்பாக்கம் போலீசில் சுந்தர் புகார் அளித்தார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தினி மற்றும் போலீசார் சுந்தர் வீட்டில் பணிபுரிந்து வரும் திருநங்கை குமார், வீட்டு வேலைக்கார பெண் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com