விருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளை

விருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை  கொள்ளை
நகை கொள்ளை
Published on

போரூர்:

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் ராம் இவரது மகள் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக மனோகர் ராமின் உறவினர் ஒருவர் மதுரையில் இருந்து வந்திருந்தார். அவர் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தார். வரவேற்பு முடிந்து அவர் இரவு அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்து இருந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com