விருகம்பாக்கம்-கொடுங்கையூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது

விருகம்பாக்கம்-கொடுங்கையூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர்:

சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளித்தாய். இவர் கடந்த 4-ந் தேதி நெற்குன்றத்தில் உள்ள மகன் வீட்டிற்கு செல்லும் வழியில் விருகம்பாக்கம் சின்மையா நகர் அருகேசாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வள்ளித்தாய் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துதப்பி சென்றனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தினேஷ், பரத்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தினேஷ் மீது மதுரவாயல், கோயம்பேடு போலீஸ் நிலையங்களில் செல்போன் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொடுங்கையூர் பகுதி யில் தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடியை சேர்ந்த லாரன்ஸ் என்கிற ஜோஸ்வாவை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 9 பவுன் நகை, 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com