விருதுநகர் அருகே பெண் சித்ரவதை: கணவன் மீது வழக்கு

விருதுநகர் அருகே பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

விருதுநகர்:

விருதுநகர் பரங்கிரிநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 33). இவருக்கும், வத்தலகுண்டுவைச் சேர்ந்த ராஜூ என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 40 பவுன் நகையும், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டதாம். 

குடிப்பழக்கம் உள்ள ராஜூ திருமணம் ஆன நாளில் இருந்து நகைகளை தருமாறு ராஜேஸ்வரியை சித்ரவதை செய்ததுடன், அவரை பிறந்த வீட்டுக்கு விரட்டி விட்டார். இது பற்றி ராஜேஸ்வரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com