

விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வீரசெல்லையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 62). கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்சவேணி. இவர் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 1-ந் தேதி தேனியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டுச்சென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து அவர் பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.