விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் செயலாளருக்கு கொலை மிரட்டல்: 11 பேர் மீது வழக்கு

புதிய தமிழகம் மாவட்ட செயலாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் செயலாளருக்கு கொலை மிரட்டல்: 11 பேர் மீது வழக்கு
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியைச் சேர்ந்தவர் ராஜாலிங்கம் (வயது 45). புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இவரது தலைமையில் அந்தப்பகுதியில் உள்ள கோவிலில் வெளிப்பிரகார ஆர்ச் கட்டுப்பட்டு வருகிறது. இந்தப்பணியை அவர் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ், அவரது மகன் பாண்டி, காத்தம்மாள், அவரது மகன் முருகையா பாண்டியன் மற்றும் 7 பேர் காரில் வந்தனர்.

அவர்கள், கோவில் வளாகத்தில் நின்ற ராஜாலிங்கத்தை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு சாதியை சொல்லி திட்டியதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்ட துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பரிந்துரையின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com