ரேசன் அரிசி கடத்தியவருக்கு 6 மாதம் சிறை தண்டனை- விருதுநகர் கோர்ட்டு உத்தரவு

ரேசன் அரிசி கடத்தியவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து விருதுநகர் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
சிறை தண்டனை
சிறை தண்டனை
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் ரேசன் அரிசியை வாங்கி விற்றதாக புகார் வந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் 150 கிலோ ரேசன் அரிசி மூடையுடன் வந்தார்.

அப்போது உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வழக்கு தொடர்ந்தனர். விருதுநகர் முதலாவது மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி வழக்கை விசாரித்து பாண்டிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com