பயிற்சியாளர் பதவி: மவுனம் காக்கும் ஷேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்த நிருபர்களின் கேள்விக்கு ஷேவாக் பதில் கூற மறுத்துள்ளார்.
பயிற்சியாளர் பதவி: மவுனம் காக்கும் ஷேவாக்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் முன்னாள் வீரர் ஷேவாக்கும் இருந்தார். ஆனால் அவரை ஓரங்கட்டிய ரவிசாஸ்திரி புதிய பயிற்சியாளராகி விட்டார். இந்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷேவாக்கிடம், தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்தும், இந்திய அணிக்கு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்தும் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளிப்பதை தவிர்த்த ஷேவாக், ‘நிகழ்ச்சி சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்’ என்று கூறி நழுவினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com