

இந்த தொடர் வரும் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் ‘மாரதா அரேபியன்ஸ்’ அணியும் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த அணிக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் கேப்டனாக விளையாட உள்ளார்.
‘மாரதா அரேபியன்ஸ்’ அணிக்கா ஜெர்ஸி அறிமுகவிழா நடைபெற்றது. இதில் சேவாக் கலந்து கொண்டார். அப்போது, ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக் தொடரில் இடம்பெற விரும்பினால், அதற்கு டி10 கிரிக்கெட் தொடர் சரியானதாக இருக்கும் என சேவாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நாம் அனைவரும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு டி10 கிரிக்கெட் சரியானதாக இருக்கும். ஏனென்றால், 10 ஓவர் போட்டி 90 நிமிடத்தில் முடிந்துவிடும். கால்பந்து போட்டியை போன்று 90 நிமிடங்களில் ஆட்டங்கள் முடிந்து, முடிவு தெரிந்துவிடும்.
ஆகவே, ஐசிசி ஒலிம்பிக் தொடரில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் அசோசியேசனில் பேசினால், டி10 தொடர் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.