இறுதிப் போட்டி விராட் கோலிக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கும்: மொகமது ஆமிர்

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு மிக நெருக்கடியாக இருக்கும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர் கூறியுள்ளார்.
இறுதிப் போட்டி விராட் கோலிக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கும்: மொகமது ஆமிர்
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர். இவர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக ரயீஸ் களம் இறங்கினார். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடாத ஆமிர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இதனால் நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் களம் இறங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முதல் முறையாக மிகப்பெரிய தொடரின் இறுதிச்சுற்றில் கேப்டனாக பணியாற்றுவதால், விராட் கோலிக்கு இப்போட்டி நெருக்கடியாக இருக்கும் என மொகமது ஆமிர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மொகமது ஆமிர் கூறுகையில் ‘‘இந்திய அணி விராட் கோலியை அதிக அளவில் சார்ந்திருக்கிறது. அவர் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகுவார். ஏனெனில், அவர் கேப்டனாக களமிறங்கும் மிகப்பெரிய தொடர். அவரது விக்கெட் எங்களுக்கு சாதகமான வகையில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com