விராலிமலை அருகே கார் மோதி சிறுவன் பலி

விராலிமலை அருகே கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தியாகு, கூலித்தொழிலாளி. இவரது மகன் யுகின் (வயது 6). இவன் கடைக்கு செல்வதற்காக இ.மேட்டுப்பட்டியில் உள்ள திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்து சென்றான். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் சிறுவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த யுகினை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அச்சிறுவன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com