‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் காலமானார்

ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் (91) உடல்நலக்குறைவால் காலமானார்.
‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் காலமானார்
Published on

போபால்:

இந்திய ராணுவத்தில் விங் கமாண்டராக பணியாற்றிய பாரத் சிங், கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானத்தை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் சுட்டு வீழ்த்தினார்.

மெச்சத்தக்க விதத்தில் பணியாற்றிய காரணத்தால் ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது பாரத் சிங்-க்கு அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வழங்கினார். மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னாவில் வசித்து வந்த பாரத் சிங் இன்று உடல்நலக்குறைவால் காலமாணார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com