தற்கொலை
தற்கொலை

விழுப்புரம் அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா (வயது 49), தொழிலாளி. இவர் தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரய்யா நேற்று முன்தினம் இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com