விழுப்புரம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து பலி - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே சிறுவந்தாட்டை சேர்ந்தவர் ராஜாராமன் மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் கலாநிதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாக குழந்தை கிடையாது. அதன் பிறகு 2016-ல் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதிலிருந்து சரண்யாவிடம், அவரது கணவர் கலாநிதி, இந்த குழந்தைகள் எனக்கு பிறந்த குழந்தைகள் இல்லை என சந்தேகப்பட்டு திட்டி தாக்கி வந்துள்ளார். இதற்கு சரண்யாவின் மாமனார் கண்ணன், மாமியார் வசந்தா ஆகியோரும் உடந்தையாக இருந்துகொண்டு சரண்யாவை திட்டி வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சரண்யா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து பலனின்றி நேற்று முன்தினம் சரண்யா இறந்தார்.

இதுகுறித்து சரண்யாவின் அண்ணன் அருண், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் கலாநிதி, கண்ணன், வசந்தா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com