விழுப்புரம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

விழுப்புரம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே வெட்டுக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும், ரெட்டணையை சேர்ந்த ஒருவருக்கும் இன்று (புதன்கிழமை) கூட்டேரிப்பட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுபற்றி அறிந்த விழுப்புரம் சைல்டுலைன் குழுவினர் விக்கிரவாண்டி போலீசாரின் உதவியுடன் வெட்டுக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரிடம் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இதேபோல் விழுப்புரம் ஜானகிபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 31-ந் தேதி சுவாமிமலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் சைல்டுலைன் குழுவினர் ஜானகிபுரத்திற்கு விரைந்து சென்று சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இந்த 2 சிறுமிகளும் விழுப்புரம் அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com