விழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்
Published on

விழுப்புரம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம் கடைவீதிகளில் கூட்டம் இன்று குறைவாக காணப்பட்டது.

இதேபோல் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது கனி தலைமையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில் உள்ள வணிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் உள்ள வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். அங்குள்ள மருந்துகடைகள் உள்பட 600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

திட்டக்குடி பகுதியில் உள்ள 650-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com