

அம்பத்தூர்:
கொரட்டூர் பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை சொந்த ஊரான மேல் மருவத்தூர் செல்வதற்காக பாடி மேம்பாலம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென விக்னேசை கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.