வில்லிவாக்கத்தில் மாணவியை தாக்கி செல்போன் பறிப்பு - வாலிபருக்கு தர்ம அடி

வில்லிவாக்கத்தில் மாணவியை தாக்கி செல்போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
வில்லிவாக்கத்தில் மாணவியை தாக்கி செல்போன் பறிப்பு - வாலிபருக்கு தர்ம அடி
Published on

அம்பத்தூர்:

வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சவித்தா. கல்லூரி மாணவி. நேற்று இரவு அவர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் வழியாக தன்னுடைய வீட்டிற்கு செல்போன் பேசி கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சவித்தாவை தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சவிதா கூச்சலிட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிய கொள்ளையர்கள் 2 பேரை விரட்டி சென்றனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த கொள்ளையன் ஒருவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

அவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் வழிப் பறியில் ஈடுபட்டது புரசைவாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். தப்பி சென்ற கூட்டாளியான சினியை போலீசார் தேடி வருகிறார்கள்.

வடபழனி என்.ஜி.ஓ. காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். ஆட்டோ டிரைவர். இன்று அதிகாலை 100 அடி சாலை நெற்குன்றம் சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டுசெல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்கராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இது குறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com