மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

வில்லிவாக்கம் அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

செங்குன்றம்:

சென்னை வில்லிவாக்கம் திருநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 30). இவர், ஆட்டோவில் பழ வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்துக்கு பயன்படுத்தும் மின்எடை எந்திரத்துக்கு வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார். நேற்று காலை எடை எந்திரத்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பன், பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வில்லிவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com