வில்லிவாக்கம்-யானைகவுனியில் ரெயில்வே மேம்பாலங்கள் இந்த ஆண்டு முடிவடையும்

வில்லிவாக்கம் மற்றும் யானைகவுனியில் ரெயில்வே மேம்பாலங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து பயன் பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #railwaybridges
வில்லிவாக்கம்-யானைகவுனியில் ரெயில்வே மேம்பாலங்கள் இந்த ஆண்டு முடிவடையும்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சியின் பாலங்கள் துறை சார்பில் வில்லிவாக்கம், யானைகவுனி ஆகிய இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

வில்லிவாக்கத்தில் ஜி.கே.எம். காலனி, புத்தமேடு ரெயில்வே கிராசிங் பகுதியை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் யானைக்கவுனியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றி விடப்பட்டுள்ளதால் மற்ற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதுபற்றி சட்டசபையிலும் பிரச்சினை கிளப்பப்பட்டது. இதையடுத்து 2017-18-ம் ஆண்டில் இந்த பாலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.70 கோடியில் இருந்து ரூ.200 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து பயன் பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாம்பலத்தில் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலப் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #railwaybridges

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com