பண்டசோழ நல்லூரில் தனியார் தொழிற்சாலையை மூட கோரி கிராம மக்கள் போராட்டம்

பண்டசோழ நல்லூரில் தனியார் தொழிற்சாலையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
போராட்டம்
Published on

சேதாரப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரில் பிரபல தனியார் பெயிண்ட் தொழிற்சாலை உள்ளது. கடந்த 18-ந் தேதி இரவு இந்த தொழிற்சாலையில் பாய்லர் ஒன்று திடீரென வெடித்து தீ பிடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் பண்டசோழநல்லூர் கிராமமே சுற்றுசூழல் மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்த விபத்தில் உயிர் இழப்பு ஏற்படாவிட்டாலும் தொடர்ந்து இந்த தொழிற்சாலை இயங்கினால் அப்பகுதியில் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிப்பு ஏற்படும் என கருதினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரியும், தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் இன்று காலை ஊர் பிரமுகர் பிரபாகரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com