கொடைக்கானலில் யானைகள் நடமாட்டத்தை கண்டித்து உண்ணாவிரதம்

கொடைக்கானல் அருகே யானைகள் நடமாட்டத்தை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானை கூட்டம்
யானை கூட்டம்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள பேத்துப்பாறை. மலை கிராமமான இங்கு அடிக்கடி யானைகள் கூட்டமாக வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. மேலும் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி சென்றன.

பழனி பாலாறு-பொருந்தலாறு அணைப்பகுதியில் சுற்றி திரியும் யானைகள் அடிக்கடி பேத்துப்பாறை பகுதிக்கு வருவதால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்துக்கு ஆளாகி வந்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பேத்துப்பறை கிராம மக்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் தெரிவிக்கையில், யானைகள் நடமாட்டத்தால் எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதற்கட்டமாக இன்று உண்ணாவிரதம் நடத்துகிறோம். அடுத்தகட்ட போராட்டம் கிராம மக்களின் கருத்து கேட்டு விரைவில் அறிவிப்போம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com