ராஜபாளையம் அருகே போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை
முற்றுகை
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார் புரம் கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் பால்பாண்டி என்பவரை புதிதாக ஊர் தலைவராக கிராம மக்கள் தேர்வு செய்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் ஊர் தலைவர் பால்பாண்டி மற்றும் ஊர் நிர்வாகிகளை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இரவு 8 மணி அளவில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். காவல் துறை அதிகாரி போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணைக்கு அழைத்து வந்த ஊர் நிர்வாகிகளை விடுவித்தனர். அதன் பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com