பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
Published on

பெரம்பலூர்:

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ந் தேதி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. 

இந்நிலையில் நேற்றும் பணியை புறக்கணித்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலையில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அப்போது கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com