காமன்வெல்த் போட்டிகள் - ரவி குமார், விகாஸ் தாகூர் வெண்கலப் பதக்கம் வென்றனர்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பளுதூக்குதலில் விகாஸ் தாகூரும், 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் ரவி குமாரும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர். #CWG18
காமன்வெல்த் போட்டிகள் - ரவி குமார், விகாஸ் தாகூர் வெண்கலப் பதக்கம் வென்றனர்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரவி குமார் வெண்கலம் வென்றார். 94 கிலோ பிரிவினருக்கான பளுதூக்குதலில் விகாஸ் தாகூரும் வெண்கலம் வென்று அசத்தினார்.

முன்னதாக, நடந்த மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளது. #CWG18 #TamilNews #CommonwealthGames2018

X

Maalai Malar
www.maalaimalar.com