

நாகர்கோவில்:
குமரி மாவட்ட தொலை தொடர்புதுறை ஆலோசனை கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி அன்று தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து மார்த்தாண்டம் சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையை ஏற்று வருகிற 31-ந்தேதி அன்று பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், பி.எஸ்.என்.எல். 4ஜி தொலை தொடர்பு சேவை மக்களுக்கு முழுமையாக கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் பயன்பாடு நேரம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒருசில மாநகரங்களை தவிர தென் தமிழகத்தில், நாகர்கோவிலில் தான் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 2-ம் கட்டமாக மார்த்தாண்டத்துக்கு 4ஜி சேவை வர உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.