ரே‌ஷனில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து விஜயகாந்த் நாளை ஆர்ப்பாட்டம்

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
ரே‌ஷனில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து விஜயகாந்த் நாளை ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் நாளை (18-ந் தேதி) சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகிக்கிறார். மாநில துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கு.நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் கே.பாலசுப்பிரமணியன், விசாகன் ராஜா, வி.சி.ஆனந்தன், வேளச்சேரி பி.பிரபாகரன், ப.மதிவாணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மாநில நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com