ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மாட்டு வண்டியில் வந்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆணைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி மாட்டு வண்டியில் வந்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மாட்டு வண்டியில் வந்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
Published on

உடுமலை:

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று உடுமலை பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆணைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காய்ந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நீண்டகாலமாக செயல்படாமல் இருக்கும் அமராவதி கரும்பாலையை விரைந்து செயல்படுத்த வேண்டும். திருவனந்தபுரம்- கன்னியாகுமாரி செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலையில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த் ஏரிபாளையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள உடுமலை பஸ் நிலையத்துக்கு மாட்டு வண்டியில் வந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் வந்தனர். பின்னர் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சின்னக்கவுண்டர் படத்தில் நான் மாட்டுவண்டியில் சென்று பொதுமக்களிடம் குறைகேட்பேன். அதேபோல் இப்போதும் நான் மாட்டுவண்டியில் வந்து உங்கள் குறைகளை கேட்கிறேன் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com