தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர் போராட்டம் - சந்திரசேகரராவ் மீது விஜயசாந்தி பாய்ச்சல்

போராட்டம் மூலம் முதல்வர் ஆன சந்திரசேகரராவ் நியாயமான போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது தவறு என விஜயசாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சந்திரசேகரராவ் - விஜயசாந்தி
சந்திரசேகரராவ் - விஜயசாந்தி
Published on

ஐதராபாத்:

தெலங்கானாவில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசுக்கு தெலங்கானா மாநில காங்கிரஸ் பிரச்சார கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போராட்டம் மூலம் முதல்வர் ஆன சந்திரசேகரராவ் நியாயமான போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது தவறு. சுமார் 48 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது அதைவிட தவறு.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு எதிர்க்கட்சி இல்லாமல் செய்த அவர், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக புகார் கூறுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com