

புதுடெல்லி:
இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிகா ‘ஏ’ அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி தொடர் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிக்கு ஒரு அணியும், கடைசி 2 போட்டிக்கு மற்றொரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணியிலும் தமிழக ஆல்ரவுன்டர் விஜய் சங்கர் இடம் பெற்றுள்ளார். இதேபோல வேகப்பந்து வீரர் ஷர்துல் தாகூர், சாம்சன், ரானா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். முதல் 3 போட்டிக்கு மணீஷ் பாண்டேயும், கடைசி 2 போட்டிக்கு ஷிரேயாஷ் அய்யரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.