விஜய் ஹாசரே கோப்பை - சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி கர்நாடகா சாம்பியன்

விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. #KARvSAU #VijayHazare #Final
விஜய் ஹாசரே கோப்பை - சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி கர்நாடகா சாம்பியன்
Published on

விஜய் ஹாசரே கிரிக்கெட் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் கர்நாடகா - சவுராஷ்டிரா ஆகிய அணிகள் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மோதியது.

டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. கர்நாடகா அணி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கேப்டன் கருண் நாயர் களமிறங்கினார்கள். இரண்டாவது ஓவரிலேயே கருண் நாயர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களத்துக்கு வந்த விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து, அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ரவிகுமார் சமர்த் நிதானமாக விளையாடினர். மறுமுனையில் விளையாடிய அகர்வால் அரைசதத்தை கடந்தார்.

தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி 50 ஓவர் முடிவில் 253 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 90 ரன்கள் எடுத்தார். ரவிகுமார் சமர்த் 48 ரன்னும், பவன் தேஷ்பாண்டே 49 ரன்னும் ஷ்ரேயாஸ் கோபால் 31 ரன்னும் எடுத்தனர்,

பின்னர், 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சவுராஷ்டிரா அணியின் சமர்த் வியாஸ், அவி பரோட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். 15 ரன்கள் எடுப்பதற்குள் அடுத்தடுத்து இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களை தொடர்ந்து தர்மேந்திரசின் ஜடேஜாவும் 1 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக சவுராஷ்டிரா அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் நட்சத்திர பேட்ஸ்மேனான சத்தீஸ்வர் புஜாரா களமிறங்கினார்.

எப்போதும் போல தனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ரன்கள் குவிக்க முயன்றார். ஆனால், மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அனைவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, சவுராஷ்டிரா 135 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. அதிக பட்சமாக புஜாரா 127 பந்தில் 94 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com