

கொடைக்கானல்:
மணிப்பூர் போராளியான இரோம் சர்மிளா திருமணத்துக்கு ஆவண பட இயக்குனர் திவ்ய பாரதி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மணிப்பூர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மக்களுக்காக போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. அவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது. ஒரு பெண்ணாக இருந்து பல சோதனைகளை தாங்கி தற்போது மன அமைதிக்காக திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தார். ஆனால் அந்த திருமணத்தையும் நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது அபத்தமான செயலாகும்.
மணிப்பூரைப் போல தமிழகம் மிகவும் மோசமான நிலையில் இல்லை என்றாலும் கூட அரசியல் எதிர்ப்பாளர்கள் பல இடங்களில் இருக்கத்தான் செய்கின்றனர். இரோம் சர்மிளா திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததை பெருமையாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.