

கரூர்:
அம்பேத்கரின் 125-வது பொன்விழா நிறைவு விழாவையொட்டியும், ரெட்டைமலை சீனிவாசனின் 158-வது பிறந்தநாளை யொட்டியும், கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றுவிழா மற்றும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயராமன் தலைமை தாங்கினார். கட்சியின் மண்டல செயலாளர் இரா.கிட்டு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கரூர், தான் தோன்றி, அரவக்குறிச்சி, மண்மங்கலம், டி.என்.பி.எல்., புஞ்சை புகளூர் உள்ளிட்ட 13 பகுதிகளில் கட்சி கொடி யேற்றி இரட்டை மலை சீனிவாசன் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியா தை செலுத்தினார்.
இதில் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துரை செந்தில், பொருளாளர் சதீஷ், நகர செயலாளர் முரளிபால சிங்கம், சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வ பெருந் தகை, செய்தி தொடர்பாளர் இளங்கோ, தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் கதிரவன், மாவட்ட அமைப் பாளர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மணி, தொல்காப்பியன், ரிபைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.