திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்ததை கண்டித்து திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்செந்தூர்:

கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்ததை கண்டித்தும், அவமதிப்பு செய்த பாரத்சேனா அமைப்பின் நிர்வாகியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூர் பகவத்சிங் பஸ்நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் கண்டண ஆர்பாட்டம் நடந்தது.

இதில் மண்டல செயலாளர் தமிழினியன், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி, திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், ஒன்றிய செயலாளர் சங்கதமிழன், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, நடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராசா, தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சுதாகர், தொழிலாளர் விடுதலை முன்னனி இளமாறன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டணர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com