வேட்டவலத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வேட்டவலத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

வேட்டவலம்:

வேட்டவலம் சோலைக்கோனார் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 35), தொழிலாளி. அவரது மனைவி ராதா (31). இவர்களுக்கு சதீஷ்குமார் (11), கபிலேஷ் (3) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பரசுராமனுக்கு கடன் தொல்லை இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வேலை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பரசுராமன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராதா வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com