வேட்டவலத்தில் வாகனம் மோதி விவசாயி பலி

வேட்டவலத்தில் வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வேட்டவலம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் போத்துவாய் கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 44), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை மோட்டார்சைக்கிளில் திருவண்ணாமலை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் வேட்டவலம் அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com