பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்

பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #ActressJayanthi #DischargedfromHospital
பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்
Published on

பெங்களூரு:

தமிழ் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி. இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பெங்களூருவில் வசித்து வரும் அவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து கடந்த மார்ச் 26-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது உடல் நலம் குறித்த வதந்திகள் பரவின. இதை டாக்டர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டனர். 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை ஜெயந்தியை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டு அறிந்தார். விரைவாக குணம் அடைந்து வீடு திரும்புமாறு அவர் வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையில், பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #ActressJayanthi #DischargedfromHospital #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com