பஞ்சாயத்து தேர்தலில் இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல் - கொல்கத்தா ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு

மேற்கு வங்காளம் மாநில பஞ்சாயத்து தேர்தலில் இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனு மீது கொல்கத்தா ஐகோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. #WestBengalPanchayatpolls #emailnominations
பஞ்சாயத்து தேர்தலில் இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல் - கொல்கத்தா ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு
Published on

 கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான அவகாசத்தை நீட்டித்த தேர்தல் ஆணையம், மீண்டும் அந்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாயத்து தேர்தலுக்கு புதிய தேதியுடன் கூடிய அறிவிப்பை வெளியிடுமாறு மேற்கு வங்காளம் மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆளும்கட்சியின் அராஜகத்துக்கு பயந்து முன்னர் வாட்ஸ்அப் மூலம் சிலர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை தேர்தல் கமிஷன் பரிசீலனைக்கு ஏற்றுகொண்டது. அதுபோல், இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி மா.கம்யூனிஸ்ட் சார்பில் தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான மற்றொரு வழக்கில், இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தேர்தல் கமிஷனுக்கு வந்துள்ள புகார்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட ஐகோர்ட், இவ்வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது.  #WestBengalPanchayatpolls #emailnominations 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com