வேப்பந்தட்டை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேப்பந்தட்டை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் தோமாஸ் மகன் ஆரோக்கியராஜ் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவருக்கும், இவரது தந்தைக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஆரோக்கியராஜ் ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார், ஆரோக்கியராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com