மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

வேப்பந்தட்டை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரிய வடகரையை சேர்ந்தவர் சேகர்(வயது 55). விவசாயியான இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாய மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com