வேப்பம்பட்டு ரெயில் தண்டவாளம் அருகே ‘திடீர்’ தீ புகை மூட்டத்தால் மின்சார ரெயில்கள் நிறுத்தம்

வேப்பம்பட்டு ரெயில் தண்டவாளம் அருகே ‘திடீர்’ தீ புகை மூட்டத்தால் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
வேப்பம்பட்டு ரெயில் தண்டவாளம் அருகே ‘திடீர்’ தீ புகை மூட்டத்தால் மின்சார ரெயில்கள் நிறுத்தம்
Published on

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் பக்கம் உள்ள முட்புதருக்கு நேற்று மாலை மர்ம கும்பல் தீவைத்தனர்.

இதில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் ரெயில் தண்டவாளமே தெரியா அளவுக்கு புகை மூட்டம் உருவானது.

இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீப்பிடித்த இடத்தை பார்வையிட்டனர். புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதன் பின்னரே மின்சார ரெயில் இயக்கப்பட்டது.

முட்புதருக்கு தீவைத்தவர்கள் குறித்து திருவள்ளூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் சுமார் ½ மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com