வெனிசுலா அதிபருக்கு எதிராக 70 லட்சம் மக்கள் வாக்களிப்பு

அரசியல் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெனிசுலா அதிபருக்கு எதிராக 71 லட்சத்து 86 ஆயிரத்து 170 பேர் வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபருக்கு எதிராக 70 லட்சம் மக்கள் வாக்களிப்பு
Published on

கராகஸ்:

தென் ஆப்பிரிக்க நாடான வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை திருத்த போவதாக மதுரோ அறிவித்தார். அதற்காக வருகிற 30-ந் தேதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்தின. வெளிநாடுகளில் வாழும் வெனிசுலா மக்கள் வாக்களிக்க வசதியாக வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டன. மொத்தம் 2 ஆயிரம் வாக்குசாவடிகளில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மொத்தம் 71 லட்சத்து 86 ஆயிரத்து 170 பேர் அதிபர் மதுரோவுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மதுரோ அதிபரான போது அவருக்கு 70 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளும், 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 70 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகளும் கிடைத்தன. தற்போது அவருக்கு எதிராக 71 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com