வெம்பக்கோட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலி

வெம்பக்கோட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 55). ஓட்டல் தொழிலாளியான இவர் சைக்கிளில் சிவகாசிக்கு வேலைக்கு சென்றார். அப்போது பேர்நாயக்கன் பட்டி அருகே சிவகாசியில் இருந்து வந்த ஒரு கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரநாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சல்வார் பட்டியை சேர்ந்த மாரிக்காளையை (40) கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com