வேலூரில் பெயிண்டர் ‘திடீர்’ மரணம்

வேலூரில் வீட்டில் மது குடித்த பெயிண்டர் திடீரென மரணம் அடைந்தார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மரணம்
மரணம்
Published on

வேலூர்:

வேலூர் கோட்டை பின்புறம் உள்ள சம்பத்நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25). பெயிண்டர். இவர் நேற்று வீட்டில் மதுகுடித்ததாக கூறப்படுகிறது. 

மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து, சதீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் சதீஷின், மனைவி சுவேதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com