வேலூரில் யோகா ஆசிரியை மர்ம மரணம் - கணவரிடம் விசாரணை

வேலூரில் யோகா ஆசிரியை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வேலூர்:

தேனி மாவட்டம் ஓரகுண்டா பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவருக்கும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதசாலை பகுதியை சேர்ந்த வாசுகி (வயது54) என்பவரின் மகளான ஜீவிதாவுக்கும் (27) கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இருவருக்கும் வேலூரில் உள்ள ஒரு யோகா மையத்தில் யோகா ஆசிரியர் வேலை கிடைத்தது. இதையடுத்து இருவரும் சாய்நாதபுரத்தில் உள்ள நடேசன் முதலியார் தெருவில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜீவிதா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

ஜீவிதா இறந்த உடன், அவது கணவர் கருப்பசாமியின் நண்பர் ஒருவர் ஜீவிதாவின் தாயர் வாசுகியை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து வாசுகி மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இதில் எனது மருமகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

வேறு பெண்ணுடனான தொடர்பை மறைக்க எனது மகளிடம் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் என தொந்தரவு செய்துள்ளார். எனவே எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். ஜீவிதாவின் கணவர் கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜீவிதாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com